பாக்ஸ் ஆபீஸில் லோகேஷ் கனகராஜ் ‘சம்பவம்’ – வசூல் இத்தனை கோடியா?

இயக்குநராக பல வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக கதாநாயகனாக களமிறங்கிய ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களைக் கொண்டாட வைத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநராக ‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ், தற்போது நடிகராகவும் அறிமுகப் படத்திலேயே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து தமிழ் சினிமா வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிற செய்திகள்

Scroll to Top