நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவரது மனைவி புனிதா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். புனிதா மோகனூர் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, கார்த்திகேயன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சமீபத்தில் மனைவி புனிதாவுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் ராஜாஜி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கடந்த அக்.12-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது காரை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு புனிதாவைத் தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை புனிதாவின் அண்ணன் வேலுமணி (42) தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் கார்த்திகேயனுக்கும் வேலுமணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலுமணியில் தலையில் ஓங்கி வெட்டியதோடு, தடுக்கச் சென்ற புனிதாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
படுகாயமடைந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.