“மூனு வாரத்துல அப்படி என்னடி லவ்வு..?” – காவல் நிலையத்தில் காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்! 

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (23). புஷ்பா ஜங்ஷன் பகுதியில் உள்ள செல்போன் ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த ஷோரூமில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் சாலையைச் சேர்ந்த மதுஸ்ரீ (20) என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த 3 வார காலத்திற்குள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருப்பூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, தங்களது மகளைக் காணவில்லை என மதுஸ்ரீயின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதேவேளையில், மதுஸ்ரீ தனது காதலர் உதயகுமாருடன் திருமணக் கோலத்தில் பாதுகாப்பு கேட்டு அதே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதைக்கண்டதும் அங்கிருந்த மதுஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ‘மூனு வாரத்துல உனக்கு அப்படி என்னடி லவ்வு?’ என ஆவேசமாகக் கேட்டபடி போலீசார் முன்பாகவே காதல் ஜோடியைச் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

இதனைக்கண்டு பதறிய போலீசார், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து காதல் ஜோடியை மீட்டு, பாதுகாப்பாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் மதுஸ்ரீயின் பெற்றோர், திருமணத்தை ஏற்க மறுத்ததால் உதயகுமாருடன் அனுப்பி வைத்தனர்.

காவல் நிலைய வளாகத்தில், போலீஸ் கண்முன்னே காதல் ஜோடி தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top