‘4 நாளில் இத்தனை கோடியா..?’ – ஃபாக்ஸ் ஆபீஸை திணறடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்துடன் உருவான இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் 1.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலைக் குவித்து, சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் நிரூபித்துள்ளது.

மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் போன்ற பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். ரிலீசான வெறும் 4 நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதால், வரவிருக்கும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன!

பிற செய்திகள்

Scroll to Top