ஈரோட்டுக்கு அடித்தது ஜாக்பாட்! ₹130 கோடி முதலீடு செய்யும் தனியார் நிறுவனம்! 

பிரபல விளையாட்டு மற்றும் ‘ஆக்டிவ்வேர்’ உடைகள் உற்பத்தி நிறுவனமான டெக்னோஸ்போர்ட் (TechnoSport), ஈரோட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசுடன் ₹130 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் கணிசமாக உயருவதுடன், ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் தனது ஆடைகளின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 25 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியிலான உடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெக்னோஸ்போர்ட், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் மாடலை பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 66 பிரத்யேக ஷோரூம்கள் மூலம் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், வரும் 2027 நிதியாண்டிற்குள் தனது வருவாயை ₹1,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய ₹130 கோடி விரிவாக்க முதலீடு, கொங்கு மண்டலத்தின் ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

Scroll to Top