தமிழ்நாடு

தமிழ்நாடு

சிறுமிகளை சீரழித்த கொடூரன்! 81 வயது ‘கிரானைட் அதிபரின்’ வெறியாட்டம் – போலீஸ் மறைக்கப் பார்த்தது ஏன்?

தொழில்துறை வட்டாரங்களில் பெரும் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்த ‘ஜெம் கிரானைட்ஸ்’ குழுமத் தலைவர் வீரமணி (வயது 81), சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த தம்பதியரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு ரகசிய பென்-டிரைவில் தொடங்கிய வன்கொடுமை வழக்கு விசாரணையை, ‘போதிய ஆதாரமில்லை’ என காவல்துறை முடிக்க நினைத்தது. பின்னர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் தள்ளியது என இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. திடுக்கிடும் திருப்பம் தந்த ‘பென்-டிரைவ்’! 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (Anti-Vice Squad / ITPU) அலுவலகத்தை அணுகிய ஒரு சமூக ஆர்வலர், முகம் தெரியாத ஒரு நபர் தனது அலுவலகத்திற்கு வந்து ஒரு பென்- டிரைவை கொடுத்து, இதை காவல்துறையில் சேர்த்துவிடுங்கள் என வேண்டி கேட்டுக் கொண்டார் என ஒரு ‘பென்-டிரைவை’ காவல் துறையிடம் ஒப்படைத்தார். அந்த பென்-டிரைவை ஆய்வு செய்த அதிகாரிகள் திடுக்கிட்டனர். ஒரு சொகுசு அறையின் படுக்கையறையில், முதியவர் ஒருவர் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடூரமான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. தேனாம்பேட்டை ‘ரகசிய சொகுசு இல்லம்’ வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அக்டோபர் 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. வீடியோவில் இடம்பெற்ற முதியவர் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பதும், அந்தச் சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரின் வாடகை வீட்டில் நடந்ததும் தெரியவந்தது. அந்த தேனாம்பேட்டை வீட்டை மகேந்திர சிம்மன் (63) மற்றும் அவரது மனைவி சாந்தி (60) ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இந்த தம்பதியரின் உதவியுடன், சிறுமிகள் மற்றும் பெண்கள் அந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. ‘வழக்கை முடித்துக்கொள்ளலாம்!’ வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், “இந்தச் சம்பவம் 2019-இல் நடந்திருக்கலாம்; வீடியோவில் இருக்கும் நபர் வீரமணி அல்ல என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மறுக்கின்றனர்; சிறுமியைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லை” எனக் கூறியதோடு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ‘Closure Report’ தாக்கல் செய்தனர்.  சாட்டையைச் சுழற்றிய போக்சோ நீதிமன்றம்! காவல் துறையின் அந்த அறிக்கையைக் கண்டு கொதித்தெழுந்த சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம், “வழக்கை முடித்து வைக்க முடியாது!” எனக் கூறி, காவல் துறையின் அறிக்கையை அதிரடியாக நிராகரித்தது. அத்துடன் விடாமல், “இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து, 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு கெடு விதித்து உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, மீண்டும் வழக்கை கையில் எடுத்த காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியது. தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் வீடியோவில் இருப்பது வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தடயங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 11 மாத தாமதம் ஏன்? 2025 அக்டோபரில் புகார் வந்தும், 2026 ஆகஸ்ட் வரை 11 மாதங்களாக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? வீடியோவில் இருக்கும் நபரை அடையாளம் காண முடியாத காரணத்தினால், வழக்கை முடித்து வைக்கச் சொல்லி போலீஸ் கோர்ட்டில் சொல்லியிருந்தால் அதிலொரு நியாயம் இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் இருக்கும் நபர் யாரென்று தெரிந்த பின்னரும், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடித்துவைக்கச் சொல்லி போலீஸ் கோர்ட்டை அணுகிய மர்மமென்ன? இங்குதான், வீரமணியின் பணபலமும், செல்வாக்கும் விளையாடியிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.  இந்த வன்கொடுமை விவகாரத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படி வரவழைப்பட்டார்கள்? கடத்தி வரப்பட்டார்களா? அல்லது பெற்றோர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டவர்களா? என்பதையெல்லாம் தீர விசாரித்து உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

தமிழ்நாடு

எமனாக வந்த ‘பலூன்’; 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17 ***** திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்துள்ள பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் – சத்யா தம்பதியர். துணி வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள். வழக்கம்போல பெற்றோர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத், மூச்சுப் பேச்சின்றி மயங்கிய நிலையில் வீட்டில் கீழே விழுந்து கிடந்துள்ளான். இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர், உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.  அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், பலூனை ஊத முயன்றபோது அல்லது விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பலூன் சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் சோமநாத் உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றி வெளியே எடுத்தனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலூன் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருள்கூட சிறு குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக பலூனை ஊதுவது அல்லது அதன் உடைந்த துண்டுகளை வைத்து விளையாடுவது போன்ற நேரங்களில் பெற்றோர் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

தமிழ்நாடு

13 மா.செக்களுக்கு ‘கெட் அவுட்’, குறுநில மன்னர் முறைக்கு முடிவுரை! – அதிரடிக்குத் தயாராகும் ஸ்டாலின்!

தி.மு.க-வில் நீண்டகாலமாக ‘குறுநில மன்னர்கள்’ போல அதிகாரம் செலுத்தி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கின்றனர். 13 மா.செ-க்களுக்கு ‘கெட் அவுட்’! புதிய விதியின்படி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவரின் வயது 70-ஐ தாண்டக் கூடாது. மேலும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆகிய 70 வயதைக் கடந்துள்ள 13 சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிபோக இருப்பது தான், தி.மு.க, வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 77-ல் இருந்து 110 மாவட்டங்கள்! தற்போது உள்ள 77 கழக மாவட்டங்களை 110 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாவட்டச் செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பழைய முகங்களின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், புதிய அமைப்பில் ‘மாநகரச் செயலாளர்’ என்ற பதவி நீக்கப்பட உள்ளது. கிளைச் செயலாளருக்கு (45 வயது), வட்டச் செயலாளருக்கு (50 வயது), ஒன்றியச் செயலாளருக்கு (60 வயது) என கீழ்மட்ட நிர்வாகப் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க முடியாது. மேலும், புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களின் புதிய நிர்வாக அமைப்புகளை 15 நாட்களுக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘குறுநில மன்னர்களுக்கு’ முடிவா? திமுக தலைமை மேற்கொள்ளவிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு திமுகவில் நடைபெறும் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றம் இது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரிசெய்வதற்கான முதல் அடியை தலைமை எடுத்துள்ளது. இதன்மூலம், கட்சியில் பல ஆண்டுகளாக ‘குறுநில மன்னர்கள்’ போல ஆதிக்கம் செலுத்தி வந்த அதிகார மையங்களின் ஆதிக்கம் குறைந்து, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், 13 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள். இவர்களது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில், புதிதாக வருபவர்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? உள்ளூர் அரசியலில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் கட்சிக்காக பணியாற்றுவார்களா? என்பதுதான் அடுத்த கேள்வி” என்றனர். மாவட்டங்களை அதிகரித்து, வயது வரம்பை கொண்டு வந்து, பதவிக்காலத்துக்கும் ‘செக்’ வைத்துள்ள திமுக தலைமை, அடுத்ததாக எந்தெந்த மாவட்டங்களில் யாரை களமிறக்கப் போகிறது என்பதே இப்போது கட்சிக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாடு

செய்கூலி, சேதாரம் ‘ஒரு பைசா’ மட்டுமே! – சர்ச்சையைக் கிளப்பும் ரூ.755 கோடி தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான டெண்டர் விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.  ஆண்டுக்கு 4.41 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்காக ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட செலவுக்கு ஒரு மோதிரத்துக்கு வெறும் 1 பைசா என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் விலைப்புள்ளி தாக்கல் செய்திருப்பதுதான் சர்ச்சையின் மையமாகியுள்ளது.  தங்கத்தின் விலையை தனியாக வழங்கும் நிலையில், செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கான விலைக்கு டெண்டர் கோரியிருந்தது தமிழக அரசு. இந்த டெண்டரில் 11 முன்னணி நகை நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், அவற்றில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்காக ரூ.0.01 என மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்னர் பங்கேற்ற நிறுவனங்களிடம் இதே விலையை ஏற்க முடியுமா என கேட்கப்பட்டதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் மட்டுமே ஒப்புக்கொண்டதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ஜோய் ஆலுக்காஸுக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 1 பைசா என்ற விலை எவ்வாறு சாத்தியமானது? 1 பைசா என்பது நிறுவனங்களுக்கு உண்மையான செலவுகளை ஈடுகட்டக்கூடிய தொகையா? அல்லது மிகப்பெரிய அளவில் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் வேறு வணிகக் கணக்கு ஏதேனும் இதில் உள்ளதா? என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. விஜய் 2010ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்து வந்ததோடு, அவர்களின் விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் கோவையில் அமைக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் கடைகளையும், விஜய் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனமும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை தான். சமீபத்தில் கூட, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஜான் ஆலுக்காஸ், முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் விளம்பரத் தொடர்பில் இருந்துவந்த, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு ரூ.755 கோடி மதிப்பிலான தமிழக அரசுத் திட்டத்தின் டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு டெண்டர் கோரியதும், திட்டமிட்டு நடந்ததா? என்கிற சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது.

தமிழ்நாடு

‘கேமரா முன் சிந்திய கண்ணீரை விட..!’ – 94 ஆண்டுகால ‘சௌகார்’ சகாப்தம் ஓய்ந்தது!

தமிழ் சினிமாவின் ‘பீஷ்மர்’ – நடிகை நடிப்பை வெறும் தொழிலாகப் பார்க்காமல், வாழ்வின் இயல்பான உணர்ச்சிகளாக திரையில் பிரதிபலித்த தமிழ் சினிமாவின் ‘பீஷ்மர்’ – நடிகை சௌகார் ஜானகி. 94 வயதான அவர் இதய நோய் பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (21.08.2026) மதியம் 1.59 மணிக்கு காலமானார். 1931-ல் பிறந்த சௌகார் ஜானகி, வெறும் நடிகை மட்டுமல்ல; தென்னிந்திய திரைத்துறையின் தலைமுறை மாற்றங்களைக் கண்ட சாட்சி, பல தலைமுறை பெண்களுக்கு நம்பிக்கை தந்த வழிகாட்டி. ‘சௌகார்’ என்ற முகவரி! 1950-ல் ‘சௌகார்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த முதல் படமே அவரது பெயருக்கு நிரந்தர முகவரியாக மாறக்கூடும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் ஆளுமையை நிலைநாட்டினார். பாலும் பழமும், பார் மகளே பார், புதிய பறவை, இரு கோடுகள், எதிர்நீச்சல், தில்லுமுல்லு என அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தமிழ் சினிமாவின் பொற்கால ஏடுகள். நகைச்சுவை, சோகம், கம்பீரம், கோபம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதில் இயல்பான ‘சௌகார் பாணி’ மிளிரும். “வாழ்க்கை எனக்கு எல்லாவற்றையும் எளிதாகத் தரவில்லை. ஆனால், நான் எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நின்றதில்லை. கேமராவுக்கு முன்னால் நான் அழுத கண்ணீரை விட, என் சுய வாழ்க்கையில் சிந்திய கண்ணீர் அதிகம். ஆனால், அந்த அனுபவங்கள் தான் என்னை இத்தனை வலுவான பெண்ணாக மாற்றின” எனச் சொன்ன செளகார் ஜானகிக்கு, இளமையிலேயே திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவுகள், பொருளாதாரச் சிரமங்கள், மற்றும் தன் குழந்தைகளைத் தனியாக வளர்த்து ஆளாக்க அவர் சந்தித்த போராட்டங்கள் என திரைக்கு வெளியேயும் கண்ணீரும் வலியும் நிறைந்ததே அவரது வாழ்க்கை. ஆனால், ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தனது பலமாக மாற்றிக்கொண்டு, தனக்கென ஒரு பாதையை உருவாக்கி, தலைமுறைகள் வியக்கும் ஒரு கலைஞராக உயர்ந்தார். கலை இருக்கும் வரை, உணர்ச்சிகள் வெளிப்படும் வரை, ‘சௌகார்’ என்ற அந்த கம்பீரக் குரலும், அவரது கனிவான புன்னகையும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

தமிழ்நாடு

‘விக்ரம்’ வீடியோ… ஈரோடு பண்ணை… அடுத்தடுத்து சிக்கிய அரிய விலங்குகள்! 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரிய வகை ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) குரங்குடன் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் கேசவநாதனிடம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை என நடிகர் விக்ரம் மற்றும் ரங்கநாதன் தரப்பில் வனத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் பெருந்துறை பண்ணையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெருந்துறை பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகை குரங்குகளை வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் தொழிலதிபர் கேசவநாதனிடம் இல்லாதது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த 3 லார் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகக் தொழிலதிபர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட 7 ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது பண்ணையிலேயே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஒரு பெரும் நெட்வொர்க் சிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர்.

தமிழ்நாடு

ரூ.5.54 கோடி முதல்வர் அலுவலகம்… டெண்டருக்கு முன்பே வேலை தொடங்கியதா?

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும் முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு

“முதல்வரைப் பாராட்டினால் வரி!” – இந்தியாவின் ரூ.214 லட்சம் கோடி கடனை அடைக்க அமைச்சரின் ‘அடடே’ ஐடியா! 

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும்முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு

கோவை ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ.கோலி’! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CAG அறிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ‘ஈ.கோலி’ (E. coli) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தணிக்கைத் துறை (CAG) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, கோவை உள்ளிட்ட 8 நிலையங்களின் குடிநீர் மாதிரிகளில் ஈ.கோலி பாக்டீரியா கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கழிவுநீர் அல்லது மனித, விலங்குகளின் கழிவுகள் குடிநீரில் கலந்திருப்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக ஈ.கோலி கருதப்படுகிறது. மேலும், குடிநீரில் குளோரின் அளவு மற்றும் பாக்டீரியாவியல், ரசாயன பரிசோதனைகள் உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் CAG சுட்டிக்காட்டியுள்ளது.  கோவை மட்டும் அல்ல… நாடு முழுவதும் ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் CAG அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கை, நடைமேடை நிழற்கூரை உள்ளிட்ட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ரயில் நிலையங்களில் சுமார் 20,000 இடங்களில் ‘டேங்க் டு டேப்’ நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவவும், குடிநீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். “தாகம் தீர்க்க ரயில் நிலையத்தில் குடிக்கும் தண்ணீரே… உடலுக்கு ஆபத்தாக மாறிவிடுமா?” என்ற கேள்வியை கோவை சம்பவம் எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு

“போலீஸ் அடித்ததால் இறந்தாரா?” – பரமசிவம் மரணத்தில் மதுரை போலீஸ் பகீர் விளக்கம்!

மதுரையில் ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார்” என குடும்பத்தினர் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸ் தரப்பின்படி, ஜூலை 17-ம் தேதி பரமசிவத்துக்கும் அருகில் வசித்த தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜூலை 23-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஜூலை 24-ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறிய பரமசிவம், ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம், “தவறி விழுந்தேன்; போலீஸ் நடவடிக்கை தேவையில்லை” என அவரே தெரிவித்ததாகவும், அது காவல் நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதை ஏற்காமல் பரமசிவம் ஆகஸ்ட் 6-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், “காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால்தான் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளதால் சர்ச்சை நீடிக்கிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Scroll to Top