தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று, சட்டதுறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஈரோடு மாவட்டதில், இரண்டு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரோட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கான ஒரு சிறப்பு நீதிமன்றம் ரூ.1.93 கோடி செலவில் அமைக்கப்படும்.
மேலும், பெருந்துறையில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், பெருந்துறையில், ரூ.2.29 கோடி செலவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை, பெருந்துறை வழக்கறிஞர் சங்கத்தினர், இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.