சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘Ala Bolelo’ நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஜெயிலர்’ படத்தின் ‘Kaavaalaa’, ‘Hukum’ போன்ற பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே, முதல் தடவை கேட்கையிலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் அனிருத்தின் வழக்கமான மேஜிக் ஹூக் இதில் இல்லை என்றும், “below average”, “Boring” என்றும், ஆக இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதேபோல், பாடலில் இடம்பெற்றுள்ள மலையாள வரிகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என கேரள ரசிகர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், “தலைவரின் மாஸ் பாட்டிற்கு நடனமாட எத்தனையோ முன்னணி நடிகைகள் காத்துக்கிடக்கும் போது, மார்க்கெட் இழந்த இனியாவை ஆடவைத்து ஏனய்யா இம்சை செய்கிறீர்கள்?” என காஸ்டிங் தேர்வை நோக்கியும் ரசிகர்கள் தங்களின் கடும் அதிருப்தியைக் கொட்டி வருகின்றனர்.
மொத்தத்தில், மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ‘Ala Bolelo’ பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இணையத்தில் இதைப் பற்றிய மீம்களும் விமர்சனப் பதிவுகளுமே தற்போது வைரலாகி வருகின்றன.