நடுரோட்டில் ‘ஹாயாக’ படுத்திருந்த சிறுத்தை… வாகன ஓட்டிகள் ஷாக்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியையொட்டிய திம்பம் மலைப்பாதையில், அதிகாலை நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நடுரோட்டிலேயே ‘ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே இந்த எதிர்பாராத காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். 

சுமார் 10 நிமிடங்கள் சாலையிலேயே படுத்திருந்த சிறுத்தை, பின்னர் எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக வாகனங்களை நிறுத்தி சிறுத்தைக்கு அருகில் செல்லவோ, வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top