ஆர்டரே பண்ணல… ஆனா பேங்க்ல இருந்து ரூ.1.76 லட்சம் காலி! – ஈரோடு ஊழியருக்கு நேர்ந்த பகீர் சம்பவம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்மையன்புதூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (56). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், வீட்டில் இருந்தபடியே மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது குறித்து ஆன்லைனில் தேடியுள்ளார்.

அவர் தேடிய சில மணி நேரங்களிலேயே அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், மிகவும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பெற இந்த ஷாப்பிங் செயலியைப் இன்ஸ்டால் செய்யுங்கள் எனக் கூறி ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. 

ஆஃபர் ஆசையால் அந்த லிங்கை க்ளிக் செய்து செயலியைத் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியைத் திறந்து பொருட்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியலை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்துள்ளார். எந்தவொரு பொருளையும் அவர் ஆர்டர் செய்யவில்லை, பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. 

ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமலேயே ரூ. 1,76,099 மாயமாகியிருப்பது தெரியவந்து அதிர்ந்து போனார். இழந்த  பணத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top