ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ‘ஜெயிலர் 2’ First single ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “The Feast is ready!” என்ற மாஸ் அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழு, ரஜினியின் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் லுக்கை மீண்டும் ரசிகர்கள் முன் கொண்டு வந்துள்ளது.

2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அனிருத்தின் இசையும் பார்க்கப்பட்ட நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது முதல் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ‘காவாலா’, ‘ஹுக்கும்’ என முதல் பாகத்தில் இசையால் அதிரவைத்த அனிருத், இந்த முறை என்ன மாஸ் சம்பவம் செய்யப்போகிறார்? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக். நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top