கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை… குப்பையில் வீசிய கொடூரம்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே தாய் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குப்பைத் தொட்டி அருகே கிடந்த ஒரு கட்டைப் பையைச் சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனே திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குப்பையில் வீசப்பட்டது ஆண் குழந்தை என்றும், பிறக்கும்போதே முட்டிக்குக் கீழே கால்கள் இல்லாமல் பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்து குழந்தையைப் பெற்றவர்களே குப்பையில் வீசிச் சென்றாரா? தாய் சேய் நல மருத்துவமனைக்கு அருகில் இந்தக் குழந்தை கிடந்ததால் அங்கு பிரசவமான குழந்தையா? அல்லது வேறு எங்கிருந்தாவது குழழந்தையைக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பூர் தெற்கு போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசிச் சென்றது யார்? எனத் தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பச்சிளம் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top