ஓடும் ரயிலில் கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம் – சிக்கிய 50 வயது ‘சில்மிஷ’ ஆசாமி!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரூவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூரூவில் இருந்து மதுரைக்குச் செல்ல மைசூரு–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், 17ஆம் தேதி அதிகாலை ஈரோடு ஸ்டேஷனைத் தாண்டி ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதே பெட்டியில் இளம்பெண்ணின் இருக்கைக்கு மேலே உள்ள இருக்கையில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், மெதுவாக அப்பெண்ணின் அருகில் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்டு சக பயணிகள் திரண்டு, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரைப் பிடித்து கரூர் ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகரைச் சேர்ந்த செல்வவிநாயகன் (வயது 50) என்பது தெரிந்தது. 

சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு ரயில் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், செல்வவிநாயகனை ஈரோடு ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top