‘நான் அவகிட்டயே போறேன்..’ காதலி இறந்த துயரத்தால் காதலன் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாபு – புஷ்பராணி தம்பதியர். இவர்களது மகன் ஸ்ரீகாந்த் (20). குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியர் பிரிந்த நிலையில், புஷ்பராணி மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீகாந்த் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குடும்பச் சூழல் காரணமாக பிளஸ் டூவோடு படிப்பை நிறுத்திய ஸ்ரீகாந்த், ஏற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்தச் சூழலில், ஏற்காடு பிளியூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மகாலட்சுமியுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்தும் மகாலட்சுமியும் காதலித்து வந்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். உயிருக்கு உயிராய் நேசித்த காதலியின் இறப்பை தாங்க முடியாமலும், அதிலிருந்து மீள முடியாமலும் ஸ்ரீகாந்த் தவித்து வந்துள்ளார். 

இதனிடையே, கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஸ்ரீகாந்த் அக்.22-ம் தேதி மதியம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், ஸ்ரீகாந்தின் சலடத்தைக் கைப்பற்றி ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலியின் இறப்பை தாங்க முடியாமல், காதலனும் உயிரைவிட்ட இந்தச் சம்பவம்  ஏற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top