ஓரங்கட்டும் செங்கோட்டையன்? – மன உளைச்சலில் தவெக மாவட்டச் செயலாளர்!

தவெக ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார், உட்கட்சியில் நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி தனது முகநூல் பக்கத்தில் மனக்குமுறலைக் கொட்டியுள்ளார்.

முகநூல் பதிவில் இருப்பது என்ன?

மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்த சிலர், விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து பயணித்த பழைய நிர்வாகிகளைத் திட்டமிட்டு ஓரங்கட்டுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதி தவெக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்ட தாளவாடி சிக்கன் பாபு மற்றும் பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளிடமிருந்த விசிலைப் பிடுங்கி வீசிய கடம்பூர் நாச்சிமுத்து உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் இணைந்து அதிகாரம் செய்கின்றனர்.

சாதி மற்றும் பொருளாதார அடிப்படையில் ஒரு சிலர் மட்டுமே சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.

மாவட்டச் செயலாளர் என்றுகூடப் பாராமல் என்னைத் தாக்க வந்த நபரை பொறுத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஈரோடு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலைமையைச் சந்தித்து எங்களது பிரச்னைகளைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொள்வோம்.

இந்தப் பதிவால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்துகொண்டே இப்படி ஒரு பதிவை வெளியிடுகிறேன் என்றால், எந்த அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என பிரதீப்குமார் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

செங்கோட்டையன் தரப்பின் நெருக்கடி?

இதன் பின்னணி குறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். “செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததில் இருந்தே பிரதீப்குமாரை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டார். அவரை பதவியிலிருந்து தூக்கிவிட்டு தனது ஆதரவாளர் ஒருவரை மாவட்டச் செயலாளராக்க செங்கோட்டையன் தரப்பு நினைக்கிறது. இதன் காரணமாக பிரதீப்குமாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவருக்கு எதிராகப் பல்வேறு வழிகளில் மறைமுக நெருக்கடிகளைக் கொடுத்தும் வருகிறது.

மாவட்டச் செயலாளராக இருந்தும் சுயமாக செயல்பட முடியாத அளவுக்கு ‘டம்மி’ ஆக்கப்பட்டு வருவது பிரதீப்குமாருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அடிக்கப் பாய்ந்த செங்கோட்டையன் ஆதரவாளர்!

சமீபத்தில், செங்கோட்டையனின் வலதுகரமாக வலம்வரும் நபர் ஒருவர், செங்கோட்டையனின் வீட்டில் வைத்தே மாவட்டச் செயலாளர் பிரதீப்குமாரை அடிக்கப் பாய்ந்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த பிரதீப்குமார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, மாவட்ட அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோரைத் தொடர்பு கொண்ட புஸ்ஸி ஆனந்த், பிரச்சினையைப் சுமுகமாகப் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் விஜய் பாலாஜியை கோபிசெட்டிபாளையம் வருமாறு செங்கோட்டையன் தரப்பு அழைத்துள்ளது. இதற்கிடையே, ‘தனது ஆதரவாளரான பிரதீப்குமாரை உங்கள் வீட்டில் வைத்து அவமானப்படுத்திவிட்டு, அங்கே பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவீர்களா?’ என வர மறுத்ததோடு, வேண்டுமானால் பொதுவான ஒரு இடத்தில் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என விஜய் பாலாஜி தரப்பு கூறியுள்ளது. 

இதையடுத்து பெருந்துறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் ரிசார்ட்டில் இந்தப் பஞ்சாயத்து நடந்துள்ளது. ஆனால், அதில் எந்தத் சுமுகத் தீர்வும் ஏற்படவில்லை.

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு சென்றும் தீர்க்கப்படாதது பிரதீப்குமாருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தற்போது பேஸ்புக்கில் அதிருப்தியைக் வெளிப்படுத்தியுள்ளார்’ என்றனர்.

நடவடிக்கை பாயுமா?

பிரதீப்குமாரின் பதிவில் செங்கோட்டையனின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும்,  செங்கோட்டையன் தரப்புடன் மோதல் நிலவும் சூழலில் இந்தப் பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.

20 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து பயணிக்கும் பிரதீப்குமாரின் பிரச்சினையை தலைமை சரி செய்யுமா? அல்லது நேற்று கட்சியில் இணைந்த செங்கோட்டையன் தரப்பின் அடாவடியை வேடிக்கை பார்க்குமா?

3 thoughts on “ஓரங்கட்டும் செங்கோட்டையன்? – மன உளைச்சலில் தவெக மாவட்டச் செயலாளர்!”

  1. Krishnaveni Krithika

    Visaarithu nalla mudivu yedukka vendum. Velai seidhavargalukku thagundha mariyadhai kodukka vendum . Katchiyil naam enna nanmai seidhalum adhu thalaivarukkey theemai seidhalum avarin name kedum . Edhai manadhil veithu kondu sindhithu seyal aatrumgal . Thalaivar yevalavi kastangalukku piragu Tamil naattai kaakka vandhirukkiraar . Pls 🙏🙏

  2. Krishnaveni Krithika

    Visaarithu nalla mudivu yedukka vendum. Velai seidhavargalukku thagundha mariyadhai kodukka vendum . Katchiyil naam enna nanmai seidhalum adhu thalaivarukkey theemai seidhalum avarin name kedum . Edhai manadhil veithu kondu sindhithu seyal aatrumgal . Thalaivar yevalavi kastangalukku piragu Tamil naattai kaakka vandhirukkiraar . Pls 🙏🙏

    Reply

  3. அரசியல் மாணவன்

    தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் இதே பிரச்சினை தான்
    மே மாதத்தில் நடந்த தேர்தலில் நாங்கள் வாக்கு சேகரிப்பு சென்ற போது ஆட்களை விட்டு கல்லெடுத்து எறிந்தவர்கள் இன்று வெற்றி பெற்றபின் கட்சியில் இணைந்து பழைய ஆட்களை அப்புறப்பட அந்த பதவியை தாங்கள் அடைய முயல்கிறார்கள்

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top