பூட்டைத் திருடும் புது டிஸைன் திருடர்கள் – திருப்பூரில் நடந்த சுவாரஸ்யம்!

திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தை அடுத்த வலசுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் அப்பகுதியில் சொந்தமாகப் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி இவரது நிறுவனத்திற்கு வந்த நபர் ஒருவர் ‘கம்பெனியில் ஏதாவது வேலை கிடைக்குமா?’ எனக் கேட்டுள்ளனர். இப்போதைக்கு ஆட்கள் தேவையில்லை என கருப்புசாமி சொல்ல, வேலை கேட்டு வந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளனர். 

அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, நிறுவனத்தின் வெளிப்புறக் கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பூட்டு காணாமல் போனதைக் கண்டு சந்தேகமடைந்த கருப்புசாமி, நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் நிறுவனத்தின் முன்பு வந்து இறங்குவதும், அதில் ஒருவர் தன்னிடம் வந்து வேலை கேட்பது போலப் பேச்சுக் கொடுத்துக் கவனத்தைத் திசைதிருப்பிய நேரத்தில், இன்னொருவர் கேட்டில் தொங்கிய பூட்டை நைசாகக் கழற்றி எடுத்துக்கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.

இதேபோல, அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் கேட்டில் இருந்த பூட்டையும் இந்தக் கும்பல் திருடிச் சென்றுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

திருடர்களிடம் இருந்து பாதுகாக்க உபயோகப்படுத்தும் பூட்டையே திருடிக்கொண்டு போனால் என்ன செய்வது என திருப்பூர்வாசிகள் புலம்புகின்றனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top