திருப்பூர் அரசுப் பள்ளியில் வெடித்த மத விவகாரம்… களமிறங்கிய இந்து முன்னணி

திருப்பூர் குமார் நகர் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத அடையாளங்கள் தேவையற்ற பிரிவினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன.

இதனைத் தடுக்கும் விதமாக, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் கைகளில் கட்டப்பட்டிருந்த பல்வேறு வண்ணக் கயிறுகளை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று அகற்றிய பிறகே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்துள்ளனர்.

இந்தத் தகவல் தெரிந்ததும் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளியின் முன்பு கூடினர்.

மாணவர்களின் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் பள்ளி நிர்வாகம் தலையிடக் கூடாது. பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும், சிவப்பு நிறக் கயிறுகளை மாணவர்களின் கைகளில் மீண்டும் கட்டி விட்டனர்.

அரசுப் பள்ளியில் நடந்த இந்த மத விவகாரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 thought on “திருப்பூர் அரசுப் பள்ளியில் வெடித்த மத விவகாரம்… களமிறங்கிய இந்து முன்னணி”

  1. இப்பொழுது இருந்து ஜாதி மதம் பிரச்சனை இல்லாமல் இவர்களுக்கு சொல்லி தருவது தப்பு இல்லை இதை ஒரு பிரச்சனை ஆக்க வேண்டாம் இது மிகவும் நல்ல விஷயம் தான்

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top