திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக, வீரமணி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார்.
வீரமணி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி பணியில் இருந்தபோது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி வீரமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி வீரமணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீரமணியின் உடலை விரைவாகத் தமிழகத்திற்கு கொண்டுவரவும், குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.