எமனாக வந்த ‘பலூன்’; 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!

👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

*****

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்துள்ள பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் – சத்யா தம்பதியர். துணி வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள்.

வழக்கம்போல பெற்றோர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத், மூச்சுப் பேச்சின்றி மயங்கிய நிலையில் வீட்டில் கீழே விழுந்து கிடந்துள்ளான்.

இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர், உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.  அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அப்போதுதான், பலூனை ஊத முயன்றபோது அல்லது விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பலூன் சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் சோமநாத் உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றி வெளியே எடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பலூன் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருள்கூட சிறு குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக பலூனை ஊதுவது அல்லது அதன் உடைந்த துண்டுகளை வைத்து விளையாடுவது போன்ற நேரங்களில் பெற்றோர் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

– தி வெஸ்ட் செய்திப் பிரிவு

*****

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!

👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

பிற செய்திகள்

Scroll to Top