லாட்ஜில் ரூம் எடுத்து போதைப்பொருள் விற்பனை! – பெருந்துறையில் சிக்கிய 3 இளைஞர்கள் 

பெருந்துறையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற 3 இளைஞர்களை பெருந்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பெருந்துறை – ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, உயர்ரக போதைப் பொருளான ‘மெத்தபெட்டமைன்’ விற்பனையில் சிலர் ஈடுபட முயல்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பாலமுருகன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் பிரகாஷ், தலைமைக் காவலர்கள் லோகநாதன், குணசேகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய டீம், சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்றபோது, போலீசாரைக் கண்டு தப்பியோட முயன்ற 3 இளைஞர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் (வயது 24), தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தராஜ் (வயது 30), பொள்ளாச்சி தில்லைநகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது.

மேற்படி நபர்களை சோதனை செய்தபோது, 12  சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 13.7 கிராம் எடையுள்ள உயர்ரக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர் மீதும் மூவர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெருந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு அவர்களை ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top