Author name: admin

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோடு கலெக்டர் கார் மோதி விவசாயி பலி… நடந்தது என்ன?

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (48), தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மின்சார ஸ்கூட்டரில் வீடு திரும்பிய சண்முகம், வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த மாவட்ட ஆட்சியரின் இன்னோவா கார், எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சண்முகத்தை, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாஇ சண்முகம் இன்னும் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்டரின் கார் மோதிய விபத்தில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று கொலை… உள்ளாடைக்குள் சிக்கிய ஆதாரம்! – நர்ஸ் கொலையின் அதிரவைக்கும் பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார் (27) – உத்திரா (26) தம்பதியர். திருமணத்திற்குப் பிறகு திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் மீன் கடையில் வேலை செய்துவர, உத்திரா அக்.3-ல் இருந்து பல்லகவுண்டன்பாளையம் பி.எம் மருத்துவமனையில் நர்ஸ் ஆகப் பணிபுரிந்துள்ளார். உத்திரா வேலைக்குச் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் ரஞ்சித்குமார் அழைத்து வருவது வழக்கம். கடந்த அக்.14-ல் மனைவியை அழைத்துவரச் சென்றபோது, ‘உத்திரா மாலை 7.15 மணிக்கே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்’ என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.   மனைவி வீட்டிற்கும் வராமல் மாயமானதால், மறுநாள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே, பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் உள்ள காட்டில் ஒரு இளம்பெண்ணின் அழுகிய சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாகப் பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.  சடலத்தைக் கைப்பற்றி விசாரித்ததில் அது மாயமான உத்திரா என்பது உறுதியானது. அதையடுத்து, கொலையாளியைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. உள்ளாடைக்குள் கிடைத்த முதல் ஆதாரம்! தனிப்படை போலீசார் பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, உத்திராவின் உள்ளாடைக்குள் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டைக் கண்டுபிடித்தனர். அதில் ஒரேயொரு போன் நம்பர் மட்டும் எழுதப்பட்டிருந்தது. அது உத்திரா வேலை பார்த்த மருத்துவமனையில் பணிபுரியும் சரவணன் என்பவரின் நம்பர் என்பது தெரியவந்தது. சரவணனைப் பிடித்த போலீசார், ‘உத்திராவுடன் உனக்குப் பழக்கம் இருந்ததா?’ என விசாரிக்க, ‘அவர் யார் என்றே எனக்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உத்திராவும் சரவணனும் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு நெருக்கமாகப் பழகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் மீண்டும் சரவணனை துருவியெடுக்க, உத்திராவுடன் பழகி வந்ததை போலீசிடம் சொன்னால் பிரச்னை வரும் என்பதால் பொய் சொன்னதாகத் தெரிவித்துள்ளார். குழம்பிப் போன போலீசார்! ஆனாலும், சரவணை நம்பாமல், ‘சம்பவத்தன்று எங்கிருந்தாய்?’ என போலீசார் விசாரிக்க, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் கோர்ஸ் படித்து வருவதால், மருத்துவமனை வேலை முடிந்தபிறகு அங்கே சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். பெருந்துறை மருத்துவக் கல்லூரி சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்த போது, சம்பவத்தன்று சரியாக இரவு 8.31 மணிக்கு சரவணன் அங்கிருந்தது தெரிந்தது.  இரவு 7.15 மணிக்கு பல்லகவுண்டன்பாளையம் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய உத்திராவை கொலை செய்துவிட்டு, இரவு 8.31-க்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு வந்து கேஷூவலாக வேலை பார்க்க முடியுமா? எனக் கருதிய போலீசார், சரவணனை விட்டுவிட்டு சந்தேகப் பட்டியலில் இருந்த மற்ற நபர்களை விசாரிக்க ஆரம்பித்தனர். காட்டிக் கொடுத்த சிசிடிவி! இதற்கிடையே, பல்லகவுண்டன்பாளையத்தில் இருந்து விஜயமங்கலம் டோல்கேட் வரையுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில், சரவணன் தனது பைக்கில் உத்திராவை அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை சரவணனிடம் காட்ட, வேறு வழியின்றி தான் உத்திராவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். 15 நிமிடத்தில் அரங்கேறிய கொடூரம்! உத்திராவும், சரவணனும் மருத்துவமனையில் நெருங்கிப் பழகி வந்ததுள்ளனர். சம்பவத்தன்று, ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்று உல்லாசமாக இருக்கலாம் என விஜயமங்கலம் டோல்கேட் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, உத்திராவின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி உள்ளான். அதே ஆடையை வைத்து உத்திராவின் கழுத்தை இறுக்கிக் கொன்று, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை திருடியுள்ளான். இந்தக் கொலையை ஒரு பாலியல் வன்கொடுமை போலக் காட்டி போலீசை திசை திருப்ப வேண்டும் என, உத்திராவின் ஆடைகளை வேறு இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். வெறும் 15 நிமிடத்திற்குள் கொலை செய்துவிட்டு, சரியாக 8.31 மணிக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளான். எதற்காக இந்த வெறிச்செயல்? நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு, துபாய்க்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அதற்கான விசா, பிளைட் டிக்கெட், ஏஜெண்ட் கமிஷன் என மொத்தம் ரூ.3.50 லட்சம் அவனுக்கு தேவைப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே ஒரு மொபைல் பறிப்பு வழக்கில் சிக்கியிருந்த சரவணனனுக்கு, வழக்கு செலவுகளுக்காக ரூ.35 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடன் நெருங்கிப் பழகிவந்த உத்திரா அணிந்திருந்த தாலிச் செயினை கவனித்துள்ளான். அதனைப் பறிப்பதற்காக உல்லாச ஆசை காட்டி தனியிடத்திற்கு அழைத்துச் சென்று, இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான். சரவணனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்த 4 பவுன் தாலிச் செயினை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவு எந்த மாதிரியான விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே உதாரணம்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சாமி கும்பிட்டுவிட்டு சங்கிலி பறிப்பு: காதலனின் கடனுக்காக நர்ஸ் போட்ட ‘ஸ்கெட்ச்’! மூதாட்டிக்கு மயக்க ஊசி போட்ட ஜோடி சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள கொளாநல்லியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). கூலித்தொழிலாளியான இவர் கடந்த அக்.15-ம் தேதி மாலை தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது நர்ஸ் உடையில் வந்த ஒரு பெண், வீடு வீடாகச் சென்று அரசு சார்பில் மருத்துவப் பரிசோதனை செய்கிறோம் எனச் சொல்லியுள்ளார். அதனை நம்பிய வள்ளியம்மாள் அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துள்ளார். அப்போது தனக்குக் கால் வலி அதிகமாக இருப்பதாகவும், அதற்கு ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். உடனே அந்தப் பெண், தனது பையில் இருந்த மருந்தை ஊசி மூலம் வள்ளியம்மாளுக்கு செலுத்த, சில நிமிடங்களில் வள்ளியம்மாள் சுயநினைவை இழந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கணவர் திருமூர்த்தி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச் சொல்ல, அதன்பின் இருவரும் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் வள்ளியம்மாள் வீட்டின் எதிரே இருந்த கோட்டை மாரியம்மன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் ஆண் ஒருவருடன் காரில் வந்து சென்றது பதிவாகியிருந்தது. கார் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த நிஷாலினி (24) மற்றும் ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (26) ஆகிய இருவர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாகப் பணியாற்றியபோது பழக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். அதன்பின்னர் நிஷாலினி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆகவும், சௌந்தர்ராஜன் மற்றொரு மருத்துவமனையிலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், செளந்தர்ராஜன் பலரிடமும் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் மனமுடைந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிஷாலினியிடம் கூறியுள்ளார். அதன்பிறகு, காதலனின் கடனை அடைக்க நிஷாலினி திருட்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுத்துள்ளார்.  சம்பவத்தன்று சௌந்தர்ராஜன் கோவையில் இருந்து நிஷாலினியைக் காரில் அழைத்துக்கொண்டு கொடுமுடி கோயிலுக்கு வந்துள்ளார். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு, தங்களின் திட்டத்தின்படி தனியாக யாராவது சிக்குவார்களா என காரில் சென்றபடியே நோட்டமிட்டுள்ளனர். அப்போது தான் கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள வீட்டில் தனியாக அமர்ந்திருந்த மூதாட்டி வள்ளியம்மாள் இவர்களின் பார்வையில் சிக்கியுள்ளார். தங்களின் திட்டப்படி வள்ளியம்மாளிடம் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டவர்கள், சிசிடிவி இருந்ததைக் கவனிக்க மறந்ததால் போலீசிடம் சிக்கி கம்பி எண்ணுகின்றனர்.

மாவட்டம், விளையாட்டுச் செய்திகள்

காட்டுக்குள் நிர்வாணமாகக் கிடந்த நர்ஸ்… காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்! 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), தனது அத்தை மகளான உத்திரா (26) என்பவரை, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலை செய்து வர, உத்திரா கடந்த 15 நாட்களாக பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள பி.எம் மருத்துவமனையில் நர்ஸ் ஆகப் பணிபுரிந்து வந்தார்.  தினமும் காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது, மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, மாலை வரும்போது அழைத்து வருவது வழக்கம். அதன்படி, கடந்த அக்.14-ஆம் தேதி மாலை மனைவியை அழைத்துவர ரஞ்சித்குமார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், ‘உத்திரா மாலை 7 மணிக்கே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்’ என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.  மனைவி வீட்டிற்கும் வராமல் மாயமானதால் அதிர்ச்சியடைந்தவர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மறுநாள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான உத்திராவைத் தேடி வந்தனர்.  இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில், பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் உள்ள காட்டில் ஒரு இளம்பெண்ணில் நிர்வாண சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாகப் பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தின் அருகே கிடந்த உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை அடையாளமாகக் கொண்டு விசாரித்ததில், அது காணாமல் போன நர்ஸ் உத்திரா என்பது உறுதியானது.  இதையடுத்து, உத்திராவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  உத்திரா வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கோயில் நகைகளைத் திருடி… கள்ளக்காதலனுடன் உல்லாசம்! – போலீசில் சிக்கிய கேடி ‘லேடி’ 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ளது இடும்பன் கோயில். இங்கு கடந்த மே மாதம் செயல் அலுவலராகப் பொறுப்பேற்ற நரசிம்மன், கோயிலின் இருப்புகளை சரிபார்த்தபோது, சுமார் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதியிடம் தகவல் தெரிவித்த நரசிம்மன், பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, பழனி டவுன் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  கோயிலின் பூட்டு, பீரோ என எதுவும் உடைபடாமல் நகைகள் கொள்ளை போனதால், கோயில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாரேனும் நகைகளைத் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். அதில் கோயில் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த, பழனி பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26), கோயில் நகைகளைத் திருடியது தெரியவந்தது.  போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்ததில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிரஞ்சனா, நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரபாகரன் (34) என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்ததும், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக, கோயில் அலுவலகத்தில் இருந்து 164 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி பிரபாகரனிடம் கொடுத்துள்ளார். இருவரும் அதை உருக்கி விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை வைத்து பல வகைகளிலும் உல்லாசமாக செலவழித்தது தெரியவந்தது.  அதையடுத்து நிரஞ்சனா மற்றும் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து உருக்கி வைக்கப்பட்டிருந்த 164 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

300 பெண்களின் ஆபாசப் படங்கள்; ஆன்லைனில் விற்று சம்பாதித்த கல்லூரி மாணவன்! – போலீசில் சிக்கிய பின்னணி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சரத் (வயது 19). கோவையில் உள்ள கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் மற்றும் உறவுப் பெண்களின் புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் இருந்து எடுத்து, அதனை ஆபாசமாக மாஃர்பிங் செய்து வந்துள்ளார்.  சோஷியல் மீடியாவில் போலியான ஐடி ஒன்றை உருவாக்கி, ‘பணம் அனுப்பினால் இளம் பெண்களின் ஆபாசப் படங்கள் அனுப்பப்படும்’ என போஸ்ட் போட்டுள்ளார். சபல புத்தி உள்ள சிலர் இதனைப் பார்த்து, சரத்தை இன்பாக்ஸ் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆபாசப் படங்கள் அடங்கிய டெலிகிராம் லிங்கை அவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், அவிநாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த டெலிகிராம் லிங்க் கிடைத்திருக்கிறது. அவர் அதை திறந்து பார்க்க, தன்னுடைய தங்கை மற்றும் அவளது தோழியின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளன. அதைப்பார்த்து அதிர்ந்துபோனவர், ஆபாசப் படங்களை ஆன்லைனில் வெளியிட்டது யார் எனத் தேடி வந்துள்ளார். ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் சரத்தை தேடிப்பிடித்த அந்த இளைஞர், சரத்தை தனியிடத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரத், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த போலீசார், உங்களைத் தாக்கியது யார்? எதற்காக தாக்கினார்கள்? என விசாரித்துள்ளனர். அதற்கு சரத் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதற்கிடையே சரத்தை தாக்கிய அந்த இளைஞர் ஆபாசப் பட விவகாரத்தை அவர்களுடைய உறவினர்களிடம் தெரியப்படுத்தி, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுத்துள்ளார். சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் குடும்பத்தார் சரத் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதையடுத்து மருத்துவமனையில் இருந்த சரத்தை போலீசார் கைது செய்தனர். சரத்தின் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சரத் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விவகாரம் வெளியே தெரிந்ததுமே ஆபாசப் படங்களின் லிங்குகள் இருந்த டெலிகிராம் குரூப்பை சரத் அழித்துள்ளார். இதனால், அந்த ஆபாசப் படங்கள் யார் யாருக்கெல்லாம் விற்கப்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளனர்? சரத் இந்தப் படங்களை வைத்து பெண்களை மிரட்டியுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்த விவகாரத்தில் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“எங்களை மன்னிச்சிடுங்க அம்மா…” – அரிவாளைக் காட்டி நகையைப் பறித்துவிட்டு மூதாட்டி காலில் விழுந்த கொள்ளையர்கள்! 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சுள்ளிபாளையம் பொன்னியன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவசாமி (61) – பூங்கொடி (58) தம்பதியர். விவசாயியான இவர்கள் தங்களது மகள் தமிழ் இலக்கியா (33) மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் (11) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வெளியே சென்றிருந்த தனது மகள் தமிழ் இலக்கியாவை அழைத்து வருவதற்காக, சிவசாமி நம்பியூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் பூங்கொடி மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டிலிருந்து சிவசாமி புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, வீட்டிற்குள் புகுந்த 3 முகமூடிக் கொள்ளையர்கள், பூங்கொடியின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியுள்ளனர். பயந்துபோய் பூங்கொடி சத்தம் போட, அவரையும் அவரது பேரனையும் கொள்ளையர்கள் தாங்கியுள்ளனர்.  அதையடுத்து பூங்கொடியிடம் அணிந்திருந்த ஆறரரை பவுன் தாலிக் கொடியை பறித்த கொள்ளையர்கள், வீட்டின் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டிய கொள்ளையன், பூங்கொடியின் காலில் விழுந்து ‘எங்களை மன்னிச்சிடுங்க’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட கணவன்; துடிதுடித்த இறந்த மனைவி!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாமிலால் (20) – நமிதா (18) தம்பதியர், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதூரில் தங்கி, சத்தி – கோவை சாலையில் உள்ள எக்ஸல் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தனர். நேற்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக சத்தியமங்கலம் வந்தவர்கள், அதன்பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர். ஆட்டோவில் செல்லும்போது தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. இதில் கோபமடைந்த யாமிலால் அவரது மனைவி நமிதாவை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் நமிதாவுக்கு தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோவிலேயே தூக்கி போட்டுக்கொண்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நமீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாமிலாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி… அரிவாளால் வெட்டிய கணவன் – நாமக்கல்லில் நடந்த பகீர் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன் (41). இவரது மனைவி புனிதா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். புனிதா மோகனூர் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கார்த்திகேயன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சமீபத்தில் மனைவி புனிதாவுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் ராஜாஜி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கடந்த அக்.12-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது காரை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு புனிதாவைத் தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை புனிதாவின் அண்ணன் வேலுமணி (42) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் வேலுமணிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலுமணியில் தலையில் ஓங்கி வெட்டியதோடு, தடுக்கச் சென்ற புனிதாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். படுகாயமடைந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

நகை, பணம் இல்லைன்னா விட்டுடுவோமா? – வீட்டு உரிமையாளர்களை அதிரவைத்த விசித்திர திருட்டு!

கரூர் மாவட்டம், புகழூர் நான்கு ரோடு அருகேயுள்ள மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (67). தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆண்டாள் (60). சென்னையில் வசிக்கும் தங்களது மகனைப் பார்ப்பதற்காக, செப்டம்பர் 27-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மகன் வீட்டில் 10 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அக்டோபர் 7-ம் தேதிதான் கரூருக்கு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்தபோது வீட்டின் காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் மெயின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீடு அலங்கோலமாகக் கிடந்ததோடு, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20,000 பணம் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வெளியே வந்து பார்த்தபோது தான் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த ஹூன்டாய் வென்யூ காரும் காணமல் போனது தெரியவந்திருக்கிறது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர். வீட்டினுள் புகுந்த கில்லாடித் திருடர்கள், பீரோ, அலமாரி என வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பணமோ, தங்க நகைகளோ சிக்கவில்லை. ‘வந்த மிஷன் ஃபெயிலியர் ஆயிடுச்சே!’ எனத் திருடர்கள் அப்செட்டில் கிளம்ப நினைத்த நேரத்தில்தான், அந்த வீட்டின் கதவருகே உள்ள சுவரில் மாட்டியிருந்த கார் சாவி அவர்களின் கண்ணில் பட்டுள்ளது. அந்தச் சாவியை எடுத்து வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் வெனியூ காரை, சொந்த காரைப் போல கேஷூவலாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் திருடப்பட்ட காரின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர். வீட்டில் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடையாமல், வீட்டிலிருந்த சாவியை வைத்து காரையே தூக்கிச் சென்ற இந்த விசித்திரத் திருட்டுச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top